வளர்சியின் பங்கீட்டில்
மனிதன் முதன்மையானால்
வீழ்ச்சியின் பங்கீடு விரசமில்லாமல் இருக்கும்.

தோன்றுதல் அரிதன்று
தோன்றலின் அடிப்படையை
அறிதலே அரிது……..
விதையின் வீரியம்
நிலத்தோடு சேரும்போதுதான்
விருட்சமாகும்.
அனலோடு அளவளாவினால்
அவிந்துதான் போகும்.
சேருமிடத்தின் பெருமை
சேர்க்கையின் விளைவை
ஒத்தே அமையும்……..
மதமும் அப்படித்தான்.
இந்த விதை
மனிதநேயத்தோடு
கூடும்போது
புனிதமாகிறது.
மலிந்ததேகத்தோடு
சேரும்போது
சூனியமாகிறது.
விதைத்தவனின்
கணக்கு
முளைக்கும் வரை
காத்திருக்கும்
முற்றிய்வுடன்
தீர்ந்துபோகும்………..
விதைவிதைத்தவன்
வினையறுகத்தானே வேண்டும்.
மதம் மனிதனால் தோன்றினாலும்
மனிதனை மனிதம் நிறைந்தவனாக
காட்டியது மதம் மட்டுமே!
நெறிகளை நேர்தியாக நிலைநிறுத்தி
அறவழிகளை அன்போடு அழகு படுத்தி
இல்லறத்திற்கும் துறவறத்திற்கும்
இணைகோடாய் இருந்துவந்ததும் அதுவே!
ஆனால் இன்றோ
மதத்தின் பரிணாமம்
நிதம் ஒரு தீர்மானம்.
திருவிழா நாட்களில்
ஆன்மீக ஆத்திகமாகவும்
தேர்தல் களத்தில்
பகுத்தறிவு நாத்திகமாகவும்
மதத்தை பகடைக்காயாய்
பயன்படுத்திக் கொள்கிறோம்.
விழும் எண்ணுக்கே விளம்பரங்கள்
கோடிவரும். தவறும் எண்கள்
திருவோட்டுடன் அடுத்த தேர்தலை நோக்கி……………
மருந்தாக வந்த மதம்
இன்று உணவாகப்பரிமாறப்படுகிறது.
நாளை மனிதத்தை விழுங்கும்
விதமாகவும் ஆகிப்போகலாம்.
பூட்டைத்திறகும் சாவியாக மதம்
இருந்தால் எப்படிப்பட்ட மனக்கதவையும்
திற்ந்துவிடும்
மாறாக் வீட்டை உடைக்கும்
உளியாக ஆகிவிட்டால்
உடைந்துபோவது
இன்று வீடாக இருக்கலாம்
நாளை நாடு என்பதை மறந்துவிடவேண்டாம்…!!
நன்றி:- திருமதி நிலா இளம்பிறை


வேண்டிய அளவு சிரித்துக்கொள்!
எவள் உன் சிரிப்பை சிறையிட போகிறாளோ!
வேண்டிய அளவு தூங்கிக்கொள் !
எவள் உன் தூக்கத்தை துளைத்திட
போகிறாளோ!
வேண்டிய அளவு ரசித்துக்கொள்!
எவள் உன் ரசனையை சொந்தம் கொள்ள போகிறாளோ!
வேண்டிய அளவு சிந்தித்து கொள்!
எவள் உன் சிந்தனையை சிதறடிக்க
போகிறாளோ!
வேண்டிய அளவு சுற்றிக்கொள் !
எவள் உன் சுகந்திரத்தை சூரையாட போகிறாளோ!
வேண்டிய அளவு வாழ்ந்து கொள்!
எவள் உன் வாழ்க்கையை வாழப்போகிறாளோ!



